தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலை பகுதி மக்கள் பாவனைக்கு!

புதன்கிழமை, மார்ச் 10, 2010
தெல்லிப்பழையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்திய சாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.சிங்கள இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரில் இராணுவத்தின் புதிய சிவில் நிர்வாக அலுவலகத்தை நேற்றுத் திறந்து வைத்தபோதே சிங்கள இராணுவத் தளபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.
தெல்லிப்பழையில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதி கள் சிலவும் பயிர்ச்செய்கை நிலங்களும் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ள தாகவும்  கூறினார்.

சிங்களப்படையின் சிவில்  நிர்வாக அலுவலகத் திறப்பு விழாவில் பேசுகையில் சிங்கள தளபதி மேலும் தெரிவித்ததாவது:
கடந்த முப்பது வருடங்களாக நடை பெற்று முடிந்த கொடூர யுதத்தினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எங்கள் மக்கள் வலு வற்றவர்களாக்கப்பட்டு, உறவுகளை இழந்து நிற்கின்றனர். இவ்வாறான தறுவாயில் இப்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை என வாழ்வில் ஒரு பாக்கியமான நிகழ்வாகத்தான் கருதுகின்றேன்.

1948ஆம் ஆண்டு நாம் பெற்ற சுதந் திரம் சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவரினதும் வேறுபாடற்ற அர்ப்பணிப்புச் சிந்தனைகளினால் கிடைக்கப்பெற்ற ஒன்றாகும். இந்தச் சுதந்திரத்தை அர்த்த முள்ளதாக்குவதற்கு ஈடு இணையற்று உழைத்து அதற்காகப்பாடுபட்ட இலங்கைத் தேசிய சங்கமும் அதிலே அங்கம் வகித்த சேர்.பொன்.இராமநாதன், சேர். பொன்.அருணாசலம் போன்றவர்களின் அர்ப்பணிப்பு போற்றப்படவேண்டியது.

எமது ஒரே தேசத்தை தெற்காசியாவில் முன்னிலை நாடாகத் திகழ, இலங்கை மக்களாகிய நாம் அழிவுப் பாதையிலே இட் டுச் செல்கின்ற இன, மத, பேத எண்ணக் கருத்துக்களை மறந்து செயற்பட்ட காலம் அது.
ஆனால் கடந்த பல வருடங்களில் பல உயிர்களை இழந்து போர் சூழலில் வாழ நேர்ந்தது. இலங்கை மக்களாகிய நாம் அவ்வாறன ஒரு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக 1971ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் திருநாட்டினது ஒருமைப்பாட்டையும் தேசிய உணர்வுகளையும் சீரழிக்கின்ற ஆயுத கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஆத்ம பலத்தை பெற்றுள்ளோம்.
ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற எண்ணக் கருவின் அடிப்படையில் வடக்கின் வசந்தம் என்ற சொத்தை அபிவிருத்தி செய்வ தற்கு நீங்கள் அனைவரும் முனைப்புடன் உள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சாந்தியும் சமாதானத்துடனும் சந்தேகமெதுவுமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கு அவசியமான சூழலை உருவாக்கியுள்ளோம். தற்போது யாழ்.மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடி களும், சிறு சோதனைக் குடிசைகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஊரடங்குச் சட்டமும் முழுமையாக நீக்கப் பட்டு மக்களின் சுதந்திரமான நடமாட்டத் துக்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தெல்லிப்பழை மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வீடுகள், பயிர்ச்செய்கை நிலங்கள் போன்றன மக்களிடம் மீண்டும் ஒப்படைக் கப்பட்டுள்ளன. அத்தோடு மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நீக்கவும் பாதுகாப்பு இடையூறுகளை நீக்கவும் இலங்கை அரசும் பாதுகாப்பு அமைச்சும் நடைமுறைகளை வகுத்துள்ளன  என்றார்.