தெற்கில் இறையில் பாதை அபிவிருத்தி இலங்கை - இந்தியா புதிய ஒப்பந்தம்

புதன்கிழமை, மார்ச் 10, 2010
212.4 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றினை இந்தியா இலங்கையுடன் செய்துள்ளது.  கொழும்பு - மாத்தறை  வரையிலான இறையில் பாதையினை மீழவும் அபிவிருத்தி செய்வது. புதிய 20 இறையில் எஞ்சின்களை பொருத்துவது.  உதிரிப்பாகங்களை வழங்குவது ஆகியன இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். மணிக்கு 120  வேகத்தில் இறையில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இதே வேளை வடக்கு இறையில் பாதை திட்டம் மந்த கதியிலேயே நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.