துப்பாக்கி முனையில் ஈழத்தமிழ் செயற்பாட்டாளர் கைது.ஆசி பொலிசாருக்கு நீதவான் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 5, 2010
Arrest
முறையான காரணங்கள் இன்றி அவுஸ்ரேலிய பொலிசார் ஈழத்தமிழ் செயற்பாட்டாளர் ஒருவரை துப்பாக்கி முனையில் கைது செய்தமையினை அவுஸ்ரேலிய நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும் இதில் ஈடுபட்ட பொலிசாரை கிரிமினல் குற்ற சாட்டிற்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தும் உள்ளார் அவுஸ்ரேலிய நீதிபதி.

2007 ஆம் ஆண்டு நியூ சவுத் வேலில் உள்ள அரசாங்க அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த ஆறுமுகம் ரஜீவன் என்பவர் அரச செயலகத்திற்கு முன்பாக துப்பாக்கி முனையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு கைவிலங்கு இடப்பட்டு கொண்டு செல்லப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாகவே இந்த கைது இடம்பெற்றது.

எனினும் அவரது கைதிற்கு இதுவரை போதிய ஆதாரங்களை பொலிசார் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  நேற்று விக்டோரியா நீதிமன்றத்தில் இவர்களது வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே நீதிபதி ஆறுமுகம் ரஜீவனை கைது செய்த முறை தொடர்பாக பொலிசாரை எச்சரித்தார்.