தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து அரசாங்கம் வடக்கு கிழக்கை கட்டி எழுப்பும் - மைத்திரிபால

திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
tna-mahida
பொது தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் ஆழும் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றி பெறும். அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் யாப்பில் மாற்றம் கொண்டு வருவ்வோம்.
அதனை அபிவிருத்தி செய்வோம் இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படுவோம். இவ்வாறு கூறியுள்ளார் மைத்திரிபால சிறிசேன அவர்கள்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த கோரிக்கைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என சிறி சேன கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பே வெல்லும் என மறைமுகமாக கூறியுள்ள சிறிசேன இப்போதே கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படபோவதாக கூறியுள்ளது பொது மக்களை திசை திருப்புவதற்காக என அவதானிகள் கூறுகின்றனர். இதே நேரம் மைத்திரிபால சிறிசேன அவர்களின் கருத்தானது ஒரு வகையில் பிள்ளையான், டக்ளஸ்,ஆகியோரை பணிய வைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.