தடுப்பு முகாம்களுக்கு தொடர்ந்தும் நிதி தரப்போவதில்லை - பிரிட்டன்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6, 2009
Mic foster
இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது.னேற்று முன் தினம் மெனிக் பாம் தடுப்பு  முகாமுக்கு பிரிட்டனின் டிஃபிட் அமைச்சர்  மைக் ஃபொஸ்டர் அவர்கள் சென்று பார்வையிட்டு  திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.பருவ மழைக்காலத்தில் அங்கு ஏற்படக் கூடிய எந்தவிதமான வெள்ளமும் வடிந்தோடும் வகையில் தேவையான வடிகால் வசதிகளை தாம் முகாம்களில் அமைப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.ஆனால், அதனுடன் பிரிட்டனும், ஐநாவும் உடன்படவில்லை.  அங்கு கடுமையான மழை பெய்தால், பெரும் அழிவும், தொற்றுநோய் பரவலும் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார் மைக்  ஃபொஸ்டர்.