ட்ரான்பரன்சி இன்ரனஷ்னல் இலங்கை அதிகாரியை அரசங்கம் கைது செய்ய முஸ்தீபு

புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கையில் இயங்கும் ட்ரான்பரன்சி இன்ரனஷ்னல் அமைப்பின் இயக்குனர் திரு வெலிமுன அவர்களை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்ய அரசு திட்டமிட்டு வருகின்றது. அத்துடன் பாக்கிய சோதி சரவணமுத்து அவர்களும் இவ்வாறு கைது செய்யப்படவுள்ளார்.
இவ்வாறு அந்த ஆசிய மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வருடம் இந்த அமைப்பின் இயக்குனர் வெலிமுவ அவர்களை குண்டு தாக்குதல் செய்து கொல்லும் முயற்சி தோலிவியில் முடிவடைந்தது எனவும் ஆனால் தற்போது அவர்மீது பொய் குற்ற சாட்டுக்கள் பதிவு செய்து அவரை கைது செய்ய முற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு.

டிரான்பரன்சி இன்ரனஷ்னல் அமைப்பே இலங்கையின் அரசாங்க திணைக்கள ஊழல்களை வெளிக்கொண்டு வருகின்றது. அத்துடன் கடந்த தேர்தல்களிலும்  தற்போது நடக்கவிருக்கும் தேர்தலிலும் அரசாங்கம் எவ்வாறு பொது சொத்துக்களை பயன்படுத்துகின்றது என வெளிக்கொணர்ந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.