டெய்லிமிரர் சண்டே ரைம்ஸ் மன்னார் ஊடகவியலாளர் வெள்ளை வான் குழுவினால் தாக்கப்பட்டார்.

வெள்ளிக்கிழமை, யூலை 23, 2010
mannar repoter
மன்னார் தலைமன்னார் வீதியில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் ஊடகவியவாளர் ஒருவர்  நேற்று இரவு 8.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். 54 வயதுடைய அந்தோனிமார்க் என்பவரே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வாகனங்கள் அதிகளவு சென்றதால் வெள்ளை வானில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மேலும் குறித்த ஊடகவியலாளரிடம் இருந்த ஆவணங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட ஊடகவியவாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தன்னை தாக்கிய இனந்தெரியாத நபர்களையும் அடையாளம் காட்ட முடியும் எனவும் குறித்த வேனில் இருவர் இருந்தாகவும் தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் மற்றும் சன்டே டைம்ஸ் ஆகிய ஊடகங்களின் பிராந்திய ஊடகவியலாளர் ஆவார்.