சிறிலங்கா நிலவரம் தொடர்பாக இன்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம்

புதன்கிழமை, யூன் 16, 2010
சிறிலங்கா நிலவரம் தொடர்பில் பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சியோபாயின் மக்டொனாக்  பாராளுமன்ற பொது சபையில் கேள்வி எழுப்பவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக கலந்துரையாடுமாறு மக்டொனாக் எம்.பி. கோரிக்கை விடுக்கவுள்ளார்.  மக்டொனக் அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக பேசி வருபவர் மட்டுமன்றி இவரது தொகுதியில் தமிழர்கள் ஒரு சிலர்தான் வசித்து வருகின்ற போதும் எதுவித உள் நோக்கமின்றியும் தமிழர்களுக்காக பேசிவருகின்றார்.