சரத் பொன்சேகாவுடன் ஒப்பந்தம் எதுவும் இல்லை - சம்பந்தன்

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2010
TNA
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் பொன்சேகாவுடன் தாம் எவ்வித உடன்படிக்கைகளையும் செய்துகொள்ளவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதே வேளை சரத் பொன்சேகாதான் ஒரு துண்டில் பல விடயங்களை எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார். அதனை வைத்தே ஒப்பந்தம் என்று மஹிந்த அணி கூறுவதாக சம்பந்தனினாதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.