சணல்4 காணொளி உண்மை ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 21, 2010
Phillip alaston
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தி உண்மை என நிரூபணம் ஆகிய நிலையிலேயே மேலதிக விசாரணை கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயும் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்ததாக கொக்னி ரெக் என்ற அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறிப்பிட்ட காணொளிகள் உண்மை யானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.