வியாழக்கிழமை, டிசம்பர் 31, 2009
கிழக்கு மாகாணத்தில் மீன்பிடி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் கிழக்கு மாகாண மீனவர்கள் கடல்தொழிலிற்கு செல்வதில் நேர வரையறை இருந்தது. அதாவது அதிகாலை மீன்பிடிக்க சென்று பகல் 11 மணிக்கு முன்பாக கரை வந்து சேரவேண்டும் என வரையறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது எந்த நேரமும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியும் என்றும் அதே வேளை எந்த நேரமும் திரும்பி வர முடியும் என்றும் கூறப்படுகின்றது.