கல்முனை மேயர் மீது தாக்குதல்: கிழக்கு மாகாண உறுப்பினர் கைது
வியாழக்கிழமை, டிசம்பர் 31, 2009
இது தொடர்பாக கல்முனை மேயர் ஹரீஸ் கூறியவை வருமாறு.
கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்காக நான் இன்று (நேற்று) காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நஸீம், அவரது சகாக்கள் சிலரை அழைத்து வந்து என்னை வழிமறித்துத் தாக்க முற்பட்டார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வந்து நஸீம் மீது தாக்குதல் நடத்தினர். அவர் சிறிது நேரம் மாநகர சபை அலுவலக அறையில் அடைத்து வைக்கப்பட்டு மக்களால் முற்று கையிடப்பட்டிருந்தார். சம்பவம் இடம்பெற்ற அரைமணி நேரம் கழித்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். "துல்கர் நஸீமை கைதுசெய்தனர்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















