கருணாவின் ஆயுததாரிகளால் அம்பாறை வாழ் தமிழ் மக்கள் பெரும் அவஸ்தை.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது மகிந்தவை வெல்லவைப்பதற்காக அருப்பாடுபட்ட இனிய பாரதி சரத்பொன்செக்காவுக்கு ஆதரவு வழங்கியதாக கூறிய அக்கரைப்பற்றில் சாகம வீதியில் உள்ள ஓர் சைக்கிள் கடைக்கு எரியூட்டியுள்ளானாம். அத்துடன் அதே வீதியில் எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கியதாக கூறிய இன்னொருவரது கடையிலிருந்த பொருட்களையும் களவாடி மக்களை துன்புறுத்தினான் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், தமிழ் மக்கள் மேற்படி தேசத்துரோகிகளின் துன்புறுத்தலுக்கு அஞ்சாது சரத்பொன்செக்காவுக்கு வாக்கழித்தால் இவனுகள் தொல்லையாவது கொஞ்சம் குறையும் என்ற காரணத்தினால் சரத்துக்கு வாக்களித்ததுடன் சிலர் வாக்களிக்கச் செல்லாமல் அத்தேர்தலை புறக்கணித்தும் உண்டு
தற்போது எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐ.ம.சு கட்சியில் வேட்பாளராக நின்று எப்படியாவது கள்ள வோட்டிலாவது பாராளுமன்றம் செல்லவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றான் இனியபாரதி. அதாவது தேசத்துரோகி கருணாவும், இவனும் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக உள்ள சிலரை அழைத்து எச்சரித்தும் வருகின்றதுடன் ஆரம்பத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை தோ;தலின் போது தாங்கள் மேற்கொண்ட அதே வாக்கு மோசடி வேலைகளை இவ் வருடம் நடைபெறவுள்ள பொதுத்தோ;தலில் கையாளுதல் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி














