கபில்நாத் படுகொலை; குற்றவாளி சாள்ஸ் இற்கு பிணை மறுப்பு

செவ்வாய்க்கிழமை, மே 25, 2010
மாணவன் கபில்நாத் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சாள்ஸ் இனை பிணையில் விடுவிக்குமாறு கோரப்பட்ட மனு சாவகச்சேரி நீதிபதியினால் நிராகரிகப்பட்டது.
சாவகச்சேரியில் கபிலநாத் என்ற மாணவனைக் கடத்திப் பின்னர் கொலை செய்த சம்பவத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளரான சூசைமுத்து அலெக்ஸாண்டர் (சாள்ஸ்) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டி ருந்தார் என்பது தெரிந்ததே.
அவரைப் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர் சார்பில் அஜரான சட்டத் தரணி சந்திரலால் சமர்ப்பித்த இந்த மனுவை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிவான் ரி.ஜே.பிரபாகரன்
மாணவன் கபிலநாத் கொலைவழக்கில் கொலை, கொலைக்கு உடந்தை, கொலை செய்யத்திட்டமிட்டமை போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரைப் பிணையில் விடுவிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என தெரிவித்தார் நீதவான்.