கடந்த காலத்தை மறந்து அபிவிருத்தியில் சகல தரப்பினரும் இனைந்து செயல்பட வேண்டும் - அம்பாரையில் தங்கேஸ்வரி எம்.பி
புதன்கிழமை, அக்டோபர் 14, 2009
மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலா 16 லட்சம் ரூபா செலவில் கன்னன்குடா ,வவுணதீவு ,ஈச்சந்தீவு ,நாவற்காடு ,விளாவெட்டுவான் ,மகிழவெட்டுவான் மற்றும் நரிப்புல் தோட்டம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நூல் நிலையங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
பிரதேச சபைத் தலைவர் க.சுப்பிரமணியம் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வுகளில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமர் " கடந்த காலத்தை மறந்து அபிவிருத்தியில் சகல தரப்பினரும் இனைந்து செயல்பட வேண்டும் .அபிவிருத்தியைப் பொறுத்த வரை எமது ஒத்துழைப்பு சகலருக்கும் கிடைக்கும் " என்றார்.
இந் நிகழ்வுகளில் பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் து.சத்தியாணந்தி ,வவுணதீவு பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் கே.விமலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















