உலக தமிழர் பேரவையின் Boycott SriLanka போராட்டம் புறக்கணிக்க முடியாது - சரத் அமுனுகம

ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
உலக தமிழர் பேரவையின் போராட்டங்கள் பிரச்சாரங்களை இலகுவாக புறக்கணிக்க முடியாது என பொது நிர்வாக அமைச்சர் கலா நிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.உலக தமிழர் பேரவையின் சிறிலங்காவை புறக்கணி மற்றும் போராட்டம் இப்போதைக்கு எதனையும் செய்யப்போவதில்லை. அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள், மீழ பொதியமைத்து உலக தமிழர் பேரவை என வந்துள்ளார்கள்.ஒரு சிலர் மட்டுமே ஆதரவளிக்கின்ரனர். உள் நாட்டில் வாக்கு வேட்டைக்காக பிரித்தானிய அரசியல் வாதிகள் சிலர் அவர்களுக்காக பேசுகின்றனர். ஆனாலும் அவர்களை இலகுவாக புறக்கணிக்க முடியாது என கூறினார் அமுனுகம.
தாமும் வெளி நாட்டமைச்சும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும்விரவில் உலக தமிழர் பேரவைக்கு எதிரான எதிர் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார் சரத் அமுனுகம.