உலக தமிழர் பேரவைக்கு அமெரிக்கா வாழ்த்து

திங்கட்கிழமை, மார்ச் 1, 2010
லண்டனில் இடம்பெற்ற உலகத்தமிழ் பேரவை மாநாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது என சர்வதேச இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கிழக்கு,மத்திய,மற்றும் தெற்காசிய பிராந்திய வெளிவிவகாரங்களுக்கான உப குழுவின் தலைவர் செனட்டர் பொன் கஸே வெளியிட்டுள்ள அறிக்கையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்துடன் அமெரிக்கா ஒருங்கிணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை தளமாகக்கொண்டு இயங்கும் தமிழ் மக்கள் அரசியல் செயற்பாட்டு சபையின் பணிகளையும் அவ்வறிக்கையில் செனட்டர் பொன் கஸே பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.