இலங்கை விடயத்தில் பாராமுகமாக இருந்தார் பான் கீ மூன் - ஐ.நா நோர்வே பிரதிநிதி
ஐ.நா அமைப்பின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ள பான் கீ மூன் தனது, அதிகாரத்தை தக்க தருணத்தில் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனவும், சிறந்த தலைமைத்துவத்திற்கு உரிய பண்புகளும் அவரிடம் இல்லை எனவும், ஐ.னா வுக்கான நோர்வே தூதுவர் மொனா ஜூல் அந்த நாட்டு அமைச்சிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் இஸ்ரேல் பாலஸ்தீன உடன்படிக்கையில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூல் அவர்கள் மேலும் தனது கருத்தில் இலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உலக பிரச்சினைகளுக்கு ஐ.நா அமைப்பு காத்திரமான தீர்வு திட்டங்களை இனியாவது முன்வைக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த மே மாத இறுதிப்பகுதியில், வடக்கில் 20,000 த்திற்கு மேற்பட்ட, அப்பாவித்தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை தடுத்திருப்பதற்கு, ஐ.நாவினால் முடிந்திருந்த போதும், அதனை ஐ.நா செய்யத்தவறி விட்டதாகவும், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இப்போர்க்குற்றங்களை நிரூபிப்பதற்கும், ஐ.நா அக்கறை எடுக்க தவறிவிட்டதாகவும், மனித உரிமை அமைப்புக்கள், பல குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தகக்கது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















