இலங்கை மீதான நடவடிக்கைகள் தாமதமாவதற்கு காரணம் இந்தியா, சீனா !

சனிக்கிழமை , மார்ச் 6, 2010
இலங்கையில் மனித உரிமைகள், போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் தாமதமாகின்றன. இழுத்தடிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் முதலாவது இந்தியா என்றும் அடுத்தது சீனா என்றும் பிரான்சின் ஐக்கிய நாடுகளிற்கான தூதர் அரோட் தெரிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ் மஹிந்த இராஜபக்ஸவின் பயங்கரவாத ஒழிப்பினை வரவேற்றதாகவும் கூறினார்.
இவர்களின் தலையீடுகளே ஐக்கிய நாடுகளின் நடவடிகைகளில் தாமதத்தினை ஏற்படுத்தின என்றும் ஏற்படுத்தி வருகின்றது என்றும் கூறியுள்ளார் அர்ரொட் அவர்கள்.