இலங்கை போர்குற்றம் தொடர்பில் வெளியக விசாரணை தேவையற்றது - ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2009
Russia FM
இலங்கையில் போர்குற்றம் தொடர்பான வெளியக விசாரணைகள் தேவை அற்றது. இலங்கைக்கு தன்னை தானே விசாரணை செய்யும் தகுதி உள்ளது இவ்வாறு தற்போது  இலங்கையில் இருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்  ஷேர்கி லாவ்ரோ தெரிவித்துள்ளார். சிங்கள மொழியில் சரளமாக பேசக்கூடிய இவர் நீண்டகாலமாக சிங்கள இனத்துடன் சேர்ந்து பழக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. போரை முடிவுக்கு கொண்டுவர நாம் ஆதரவு வழங்கினோம் அதே போல  போரின் பின்னரான நடவடிக்கைகளுக்கும் நாம் ஆதரவு வழங்குவோம் என கூறியுள்ளார் திரு ஷேர்கி.