இலங்கை ஊடாக இந்திய, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுகின்றனவா?
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 13, 2009
இது தவிர ஆங்காங்கே இலங்கை இந்திய கடற்பகுதியில் பல ரோலர்கள் மீன்பிடிப்பது போன்று பல இரகசிய நடவடிக்கைகளின் ஈடுபட்டு வந்துள்ளமையும் அவை இந்திய கடற்பகுதிக்குள் அல்லது இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து தப்பி விடுவதும் வழமை. ஆனால் கடந்த சில வாரங்களாக இலங்கையில் இருந்து நவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி படகுகள் பல நாட்களாக மீன்பிடியில் ஈடுபடுவதற்காக அழ்கடல்பகுதிக்குள் நுழைவது அதிகரிப்பது மட்டுமன்றி அந்த படகுகளில் பிற நாட்டவர்கள் இருப்பதாக தமிழ் நாட்டு மீனவர்கள் கூறிவந்ததும் தெரிந்ததே.
நேற்று முந்தினம் கூட இலங்கையில் இருந்து சென்ற சில மீன்பிடி படகுகளில் ஒன்று இந்திய கரையோர காவல்படையினர் இருவரை மடக்கி பிடித்து பணைய கைதிகளாக வைத்திருந்ததாகவும் பின்னர் அவர்களை இந்திய கடற் படையினர் விடுவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த பணையம் வைக்கப்பட்ட படகினை எங்கே என கேட்டபோது இலங்கை அந்த படகினை புயலில் அகப்பட்டு காணவில்லை என கூறியது. ஆனால் இந்தியாவோ அந்த படகு தீப்பற்றி எரிந்து விட்டது என கூறுகின்றது.
இதே வேளை நேற்று தாய்லாந்து அரசு அந்த நாட்டில் தரையிறங்கிய ஈ.எல். 70 என்ற சரக்கு விமானத்தினை 30 தொன் ஆயுதங்களுடன் அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய கைப்பற்றி தடுத்து வைத்துள்ளது. அந்த விமானத்தில் கிழக்கி ஐரோப்பிய நாட்டவர் இருந்துள்ளனர். இவர்களின் தகவலின்படி இந்த விமானம் இலங்கைக்கு செல்வதற்கே பறப்பில் ஈடுபட்டது என கூறப்பட்டு இருக்கின்றது ஆனால் இலங்கை அரசு மறுத்துள்ளது.
இதே நேரம் இலங்கை விமான நிலையத்தில் இந்த விமானம் முன்பு ஒருதடவை வந்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எதற்காக வந்தது என்பதற்கான தகவல்கள் இலங்கை அரசு மூடி மறைத்துள்ளது. ஆகவே ஒட்டு மொத்தத்தில் இந்திய இலங்கை கடற்பகுதிகளில் அயல் நாடுகள் மாறி மாறி தமது இரகசிய நடவடிக்கைகளிற்கும், தீவிரவாத அமைப்புக்களுக்கும் ஆயுத வினியோகங்கள் செய்துவருகின்றன என்பதே உண்மை.
இந்தியா பாகிஸ்தான் நாட்டில் உள்ள தமது இரகசிய அமைப்புக்களுக்கும், பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள இரகசிய அமைப்புக்களுக்கும் இவ்வாறு வழங்குகின்றன. ஆனால் அமெரிக்காவுக்கு உள்ள கரிசனை தமக்கு தெரியாமலேயே ஆயுதங்கள் அல்கைடா இயக்கத்திற்கும் செல்கின்றதா என்பதே ஆகும்.
படகுகள் மூலம் ஆயுத வினியோகத்தில் குளறு படிகள் இருந்தமையினாலேயே விமான மூலம் ஆயுதங்களை வினியோகிக்க முயன்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். எது எப்படி இருப்பினும் இலங்கை அரசாங்கமானது விலாங்கு மீன் போல் செயற்பட்டு கொண்டு அல்கைடா, உட்பட இந்திய, பாகிஸ்தான் தீவிர வாத அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் வினியோகிக்கும் ஒரு மார்க்கமாக இருந்து வருகின்றமை தெளிவாகியுள்ளது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்த போது அவை அனைத்தும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது இலகுவாக பழிகள் சுமத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. 2005 ம் ஆண்டில் இவ்வாறான பல ஆயுத கடத்தல்கள் பாக்கு நீரிணையில் நடைபெற்றது அந்தவேளை பல ரோலர்களும் பிடிக்கப்பட்டன. ஆனால் இறுதியில் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முற்பட்டவர்கள் என சம்பந்தப்பட்ட நாடுகள் சமாளித்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை தாய்லாந்து நாடு ஆயுதம் விற்பனை செய்யும் நாடாகவும் முகவர் நாடாகவும் இருந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு இந்திய, பாகிஸ்தான், அமெரிக்க உளவு அமைப்புக்களே ஆயுதம் விற்கும் நிறுவனங்களை திறந்து வைத்துள்ளன. இந்த விற்பனை நிலயங்கள் ஊடாக ஒவ்வொரு நாடுகளும் தமது இரகசிய நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களை கடத்துவது மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களை விற்பதன் ஊடாக அவர்களது வலைப்பின்னல்களை கண்டு பிடிப்பது ஆகியன உள்ளடங்கும்.
இந்த பொறியில் விடுதலைப்புலிகளும் பல தடவை சிக்கி மீண்டமை குறிப்பிடத்தக்கது. 2006 இல் விடுதலைபுலிகளின் ஏவுகணை மற்றும் வான் எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கான கொள்வனவுகள் மிகப்பெரிய நாடு ஒன்றின் உளவு அமைப்பே கையாண்டதாகவும் இறுதியில் மில்லியன் டொலர்கள் நிதியினை பெற்று விட்டு புலிகளின் வானெதிர்ப்பு ஆயுத நிபுணர்களை தமது நாட்டிற்கு தந்திரமாக அழைத்து கைது செய்து பின்னர் வழக்கு பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆக ஒட்டு மொத்தத்தில் உண்மையான பயங்கரவாதிகள் யார் ? பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பது யார்? தென் கிழக்கு தெற்கு ஆசியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் பேருதவி புரிவது இலங்கையில் அரசா அல்லது விடுதலைப்புலிகளா என்பது தற்போதைய விசாரணைகள் உண்மையாக நடைபெற்றால் தெரிய வரும் அல்லது எல்லோரும் அரசுகள் என்பதனால் மூடிமறைக்கவும் முனையலாம்.
வடகொரியா, பர்மா என்பன ஒரு மார்க்கமாகவே ஆயுத வினியோகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் மிகப்பலம் பொருந்திய நாடுகளே, நாட்டின் வணிக நிறுவனங்களே இந்த நாடுகளையும் , கடல்பாதைகளையும் பயன்படுத்துகின்றன. இங்கு பிரச்சினை என்னவெனில் இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகளை சாட்டாக வைத்து இலங்கை ,இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் தமது இரகசிய ஆயுத வினியோகங்களை செய்து வந்தனர். அதாவது தென் ஆசியாவில் தமது இரகசிய நடவடிக்கை தெரியவரும் போது அதற்காக விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்தியும் தேவை ஏற்படின் அவர்களில் சிலரை பிடித்து சிறைவைத்தும் தமது திட்டங்களை மூடி மறைத்து வந்தனர்.
ஆனால் இப்போது புலிகள் அழிந்துவிட்டார்கள் என்ற செய்தியின் பின்பு எல்லோருக்கும் தடுமாற்றம் எழுந்துள்ளது உண்மை. அதனாலேயே இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி வெளியில் வருகின்றன. ஆனால் இந்த நாடுகள் இலங்கை உட்பட சும்மா இருக்க போவதில்லை உதாரணமாக இலங்கையில் புலிகளுக்கு மாற்றீடான அமைப்புக்களை போலிகளாக உருவாக்கி தமது இரகசிய திட்டங்களை செய்ய போவது திண்ணம். செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த முறை அது இலங்கை, இந்திய, ஏன் அமெரிக்க பாகிஸ்தான் நாடுகளின் கட்டுப்பாடுகளில் இருக்கலாம்.
இப்போது தெரியும் இலங்கையில் அயல், மேற்குலக நாடுகள் ஏன் முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றன? ஏன் கடற்பாதையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்கின்றன? ஏன் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன? என்று.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி


















