இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள்! சர்வதேச விசாரணை அவசியம்: பிரித்தானியாவின் 2008 ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

திங்கட்கிழமை, ஆகஸ்ட் 10, 2009
 
HR committee
பிரித்தானிய அரசின் சர்வதேச உறவுகளிற்கான  நாடாளுமன்ற குழுவின் 2008 ற்கான அறிக்கை  வெளிவந்துள்ளது. இதில் இலங்கையில் கடந்தகால போர் நடவடிக்கையில் இடம்பெற்றதாக கூறப்படும்  யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை  வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான விசாரணை இன்மை, தண்டனைகள் வழங்கப்படாமை,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  மனிதத்திற்கு எதிராக யுத்தக் குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.  இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.