இலங்கையிலும் பாலியல் வல்லுறவு போர் ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது - ஹிலாரி கிளிங்டன்
வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2009
இலங்கை, பால்கன் நாடுகளில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் நடவடிக்கையானது ஓர் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க வெளிவிகார செயலர் ஹிலாரி ரொதாம் கிளிங்டன் தெரிவித்துள்ளார். நேற்று ஐ. நா சபையின் 64 வது அமர்வில் பேசிய இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதானது போர் நடவடிக்கையில் ஓர் ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது எனவும் அவ்வாரான சம்பவங்கள் போர் குற்றமாக கருதப்படும் என ஐ. நா பாதுகாப்பு சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாலியல் வல்லுறவானது போராயுதமாக , மக்களை இடம்பெயர செய்தல், துன்புறுத்தல், கருத்துக்களை திணித்தல், இனவன்முறைகளை தூண்டி விடல் போன்றவற்றுக்கு பாவிக்கப்படுகின்றன என்றும் இதனால் இவைகளினை போராயுதமாக கருதப்பட்டு போர்க்குற்ற சாட்டுக்கு உட்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















