இன்று உலக தமிழர் பேரவை மா நாட்டில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றுவார். இலங்கை அரசு எதிர்ப்பு

புதன்கிழமை, பெப்ரவரி 24, 2010
தேசிய மீள் இணக்க மேம்பாட்டுக்காக புதிய மக்கள் ஆணையைப் பயன்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸவிடம் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் கடந்த மே மாதம் முடிவடைந்திருக்கிறது.  தேசிய மீள் இணக்கத்தின் ஊடாக அனைத்து சமூகங்களுக்குமான  சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் டேவிட் மில்லிபான்ட் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பிரிட்டனில் இன்று நடைபெறவிருக்கும் உலக  தமிழ் பேரவையின் மாநாட்டில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்தது.இதே நேரம் இலங்கை அரசு இதற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.