இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிப்பு செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 பொது மக்களும் இன்று தமக்கு நீதி வழங்குமாறு உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் படகில் இருந்து இறங்க மறுத்து வருகின்றனர். தாம் அவுஸ்ரேலியா செல்லவேண்டும் இல்லையேல் வேறொரு நாட்டிற்கு செல்லவேண்டும் என கோரிக்கை விடுத்துளனர்.