இந்தோனேசிய கடற்பகுதில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் உண்ணா விரதத்தினை கைவிட்டுள்ளனர்
சனிக்கிழமை , அக்டோபர் 17, 2009
இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வியாழக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்ட தமது உண்ணா நோன்பினை கைவிட்டுள்ளனர். இந்த போராட்டம் ஒர் எதிர்மறையான கருத்தை ஏற்படுத்துவதாகவும் அத்துடன் அங்கு இருக்கின்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நிலையினை கருத்தில் கொண்டும் தாம் இந்த போராட்டத்தினை கைவிடுவதாகவும் கூறியுள்ளனர்.தாம் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் உதவியுடன் அவர்கள் எம்மை பொறுப்பெடுத்தால் படகில் இருந்து வெளியே வர தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஏற்கனவே ஒரு குழந்தை உட்பட உண்ணாவிரதம் இருந்த இருவர் உடல்னிலை மோசமாகியதால் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
தம்மை நீண்டகாலத்திற்கு இந்தோனேசியாவில் வைத்திருக்கவேண்டாம் எனவும் ஏனெனில் தாம் அங்கு வாழ முடியாது எனவும் மக்கள் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















