இந்தியாவில் 300 கோடி செலவில் பெளத்த பல்கலைகழகம்; இலங்கை-இந்திய கூட்டுறவுக்கு அடையாளமாம்

திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கை இந்திய கூட்டு முயற்சியில் 300 கோடி செலவில் புத்த கோயில் ஒன்றினையும் பல்கலை கழகத்தினையும் அமைக்க இந்திய இலங்கை பெளத்த பீடங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்தியாவில் சான்சி எனும் இடத்தில் அதாவது மேற்கு இந்தியாவில் போபால் எனும் இடத்தில் இருந்து 34 கி.மீ தூரத்தில் இந்த கட்டுமானம் கட்டப்படவிருக்கின்றது.
இலங்கை இந்திய கூட்டுறவின் பாலமாக இந்த புத்த கோயிலும் பெளத்த பல்கலைகழகமும்  இருக்கும் என சிறிலங்கா பிரதம மந்திரி ரட்னசிறி விக்கிரம நாயக்க கூறியுள்ளார். இந்த கட்டட நிர்மாணத்திற்கான பொறுப்பினை இலங்கையின் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று பொறுப்பெடுத்துள்ளது. இலங்கை சார்பான செலவுகளை சீனா - இலங்கை நட்புறவு சம்மேளனம் வழங்குமாம்.