இத்தாலி பலெர்மோ நகரில் இடம்பெற்ற முள்ளிவைக்கால் நிகழ்வு
செவ்வாய்க்கிழமை, மே 18, 2010
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பலெர்மோ பொலித்தியாமா சதுர்க்கத்தில் மாலை 5:30 மணிக்கு பொதுசுடர் மற்றும் ஈகைசுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி இரவு 8:00 மணி வரை நடைபெற்றது.
இவ்நிகழ்வில் பலநூறு மக்கள் கலந்து கொண்டு இலங்கை இனவெறி பிடித்த கொலைவெறி அரசால் அப்பாவித்தானமாக கொல்லப்பட்ட மக்களுக்கும் வீழ்ந்து விட வீரத்துடன் இறுதிவரை களமாடி வீரசாவடைந்த தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் மக்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் மக்கள் தங்கள் உணர்வுகளை கவியாக்கி கவிதைகளை உணர்வுடன் ஒலித்தனார் அத்தோடு இலங்கை அரசின் போர்குற்றங்களை, இத்தாலிய அரசுக்கும் மக்களுக்கும் எடுத்து சொல்லும் முகமாக துண்டுபிரசுரங்களை வழங்கியும் மற்றும் காணொளிகாட்சிகள் மூலமும் வெளிப்படுத்தினர்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















