இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக சிங்களவர் ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010
sinhala protest
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக  அங்கு இருக்கும் சிங்களவர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.
தேர்தலில் மஹிந்த மோசடி செய்தார் எனவும், அதன் பின்னர் பொய்குற்ற சாட்டினை மேற்கொண்டு சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மஹிந்த என்றுமே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினராம்.
வெளி நாடு ஒன்றில் இதுவரை காலமும் மஹிந்தவுக்கு எதிராக தமிழர்களே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர். ஆனால் இப்போ சிங்களவர் மஹிந்தவுக்கெ எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது அங்கு இருக்கின்ற பொலிசாருக்கு அதிசயமாக இருந்தது. இலங்கை தூதரக அதிகாரிகள் ரோமில் உள்ள பொலிசாருக்கும், ஊடகங்களிற்கும் இந்த விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என கூறியுள்ளனர்.
இத்தாலியில் ரோம், நாப்பொலி, மிலான் ஆகிய பகுதிகளில் 30,000 மேற்பட்ட சிங்களவர்கள் இருக்கின்றனர். இவர்களில் கூடுதலானோர் படைகளில் இருந்து தப்பி ஓடியவர்கள்.