ஆயிரக்கணக்கான கனேடிய தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டனர்

ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 20, 2009
canada election
கனடாவில் நேற்று நடந்து முடிந்த இறைமையுள்ள தமிழீழத்திற்கான வாக்கெடுப்பில்  ஒவ்வொரு நிலைஅயத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டனர். இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகின்றது. கனடா தழுவி 31 வாக்களிப்பு நிலையங்களில் 62 வாக்களிப்ப மின் இயந்திரங்களினூடாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்.தேர்தலுக்காக .வயது பால் வேறுபாடின்றி பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேர்ததலை நடத்தும் பணிகளில் ஈடுபட்டனர். ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள் இளையோர் அமைப்புகள் துறைசார் வல்லுனர் அமைப்புகள் என பல்வேறு தமிழ் சமூக அமைப்புக்களும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டனர்