ஆசிய அபிவிருத்தி வங்கி 12. 5 மில்லியன் டொலர் வடக்கு கிழக்கிற்கு உதவி

புதன்கிழமை, மார்ச் 10, 2010
ஆசிய அபிவிருத்தி வங்கி வடக்கு கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிர்மாணிக்க 12. 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதி ஏற்கனவே நடைமுறையில் உள்ள நெகோட் திட்டத்தின் ஊடாக ( வடக்கு கிழக்கு சமுதாய மீழ் கட்டமைப்பு) வழங்க முடிவு செய்துள்ளது.

சமாதான காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி நெகோட் திட்டத்தின் மூலம் பல் பாடசாலைகள், வைத்திய சாலைகளை இந்த நெகோட் திட்டத்தின் ஊடாக செயற்படுத்தியது. மேலும் இந்த திட்டத்தின் 60 வீதமான செய்ற்பாட்டினை புனர் வாழ்வுக்கழகத்தின் ஊடாகவே செய்து வந்தது.

ஆனால் புனர்வாழ்வுக்கழகம் அங்கு உத்தியோக பூர்வமாக செயற்படாத நிலையில் சிங்கள அமைப்புக்களே இந்த திட்டங்களின் அமுலாக்க நிறுவனங்களாக பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.