அவுஸ்ரேலியா சிறிலங்கா மீது கடும் அழுத்தங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் - CJPC

வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
CJPC
அவுஸ்ரேலியா அரசாங்கம் சிறிலங்கா மீது அதிக இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவுஸ்ரேலிய கத்தோலிக்க ஆயர்களின் சமாதானம் மற்றும் நீதிக்கான அமைப்பு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது (Catholic Justice and Pease Commission) .  சிறிலங்கா தமிழர்களை படுகொலை செய்துள்ளது. கூடவே தொடர்ண்டுந்தும் துன்புறுத்துகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் வரி சலுகையினை நிறுத்தியுள்ளமையினையும் சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பின் தலைவர் பேராயர் பீற்றர் ஆண்டிற் சிறிலங்கா அரசு படிப்படியாக போர்குற்றம் செய்த காரணத்தால் சர்வதேச ஆதரவை இழந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச முரண்பாட்டிற்கான அமைப்பின் அறிக்கையில் இலங்கை அரசு திட்டமிட்டு தமிழர்களை புறம் தள்ளுவதுடன் துன்பங்களையும் கொடுத்து வருவதாக கூறியுள்ளது. ஆகவே அவுஸ்ரேலியா இது விடயத்தில் மிகவும் உறுதியான அழுத்தத்தினை சிறிலங்கா மீது பிரயோகிக்கவேண்டும் என கூறியுள்ளார். பீற்றர் ஆண்ட்ரு.