அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம் உடைக்கப்படுகிறது தடுக்க திராணியற்று இருக்கும் மாகாண சபை

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009
pillaiyaan
காணியினை அபகரிக்கும் நோக்கிலும்,தமிழ் பாடசாலையினை அகற்றும் நோக்கிலும்  ,அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரால் கட்டம் கட்டமாக உடைக்கப்பட்டு வருகின்றன. இதனை பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாடசாலை சிங்கள வலயத்திற்குள் இருப்பதனாலேயே இந்த நிலை என தெரிவிக்கப்படுகின்றது.  இந்த சம்பவம் தொடர்பாக  மாகாண கல்வி அமைச்சுக்கும் தெரிவிக்கபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கல்வி செயற்பாடுகள் யாவும் மாகாண சபை நிர்வாகத்திற்குள் இருப்பதனால் ஏன் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும் கேள்வி எழுப்ப படுகின்றது. தேசிய பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து செயற்பாடுகளும் மாகாண சபை கல்வி அமைச்சுக்குள்ளேயே வருகின்றமை சுட்டிகாட்டதக்கது.

குறித்த பாடசாலையில்  தற்போது 25 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 6 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவ்வித்தியாலய வகுப்பறையில் ஒரு பகுதி அப்பிரதேசத்திலுள்ள சாரணர் ஆசிரியர் ஒருவரால் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.