அம்பாரையில் கருணா பிள்ளையான் அணிகளுக்கு இடையே மோதல் மூவர் காயம்

புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
karuna and pillai
தென் தமிழீழம் அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் பிள்ளையான் குழுவினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் பிள்ளையான் தரப்பினை சேர்ந்த  மூவர் படுகாயமுற்றனர். இதே வேளை கருணா தரப்பில் இருந்து நாலுபேரை பிள்ளையான் தரப்பினர் பிடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று மதியமளவில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடுகளும், கத்திவெட்டுக்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மோதலின்பின்னர் பிள்ளையான் தரப்பினர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திலும், கருணா தரப்பினர் தம்பிலுவில் பொலிஸ் நிலயத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.