அமெரிக்க அரசு திணைக்களத்திற்கு பேச்சு எழுதி கொடுப்பதற்கு ஆட்தேவை - சிங்களவர் கிண்டல்
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6, 2009
அதாவது ஹிலாரி கிளிங்ரன் அவர்கள் பாலியல் துன்புறுத்தல் இலங்கையிலும் ஓர் போர் ஆயுதமாக பாவிக்கப்பட்டது என குறிப்பிட்டார். பின்னர் அப்படி கருத்துப்பட அம்மா சொல்லவில்லை என சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்தார். அதன் பின்னர் மெலானி அவர்கள் 2006- 2009 இடையில் அவ்வாறு நடக்கவில்லை என கூறினார். ஆனால் இவர் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் ஆயுத குழுக்கள் அவ்வாறு ஈடுபட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். எனவே இவ்வாறாக மாறி மாறி அறிக்கை விடுகின்றனர். இவர்கள் வயது போன பெண்கள் என்பதால் ஞாபக மறதி இருக்கலாம் எனவே மல்ல உரை எழுதுபவர் தேவை என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















