ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இந்தியாப்வில் இருப்பது போன்றான ஆட்சியினை கூட்டமைப்பு கோரியுள்ளது. இதற்கு சமஷ்டி சொல்லினை போட்டு திம்பு கோட்பாடுகளையும் புகுத்தி சாம்பாராக்கி தமிழ் மக்களிடம் ஆணை கேட்கின்றது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க.
மஹிந்த இராசபக்ஷவினை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக இதுவரை 37 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிரிகேடியர், கேணல் உட்பட பல உயர் அதிகாரிகளும் அடங்குவர்.