யாழ் நிருபர்

Stories from யாழ் நிருபர்

புதன்கிழமை, டிசம்பர் 2, 2009
நவம்பர் 30,2009 அரசாங்கப் பாடசாலைகளுக்கு இலவசப் பாடநூல்களும் சீருடையும் வழங்குவதற்கான தேசிய நிகழ்வு எதிர்வரும் ஒன்பதாந் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.முப்பது வருடங்களுக்குப் பின்னர் முதன் முதலாக யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் சிங்கள அமைச்சர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2009
2005 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட யாழ் குடா நாட்டு பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சாள்ஸ் விஜெயவர்தனவின் வழக்கின் முக்கிய சந்தேக நபரை தாம் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார் கூறியுள்ளனர்.