பிரித்தானிய நிருபர்

Stories from பிரித்தானிய நிருபர்

செவ்வாய்க்கிழமை, யூன் 29, 2010
செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும்,
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12, 2010
சனல் 4 தொடர்பான வீடியோ ஆவணத்தினை மூன்று நிபுணர்களை வைத்து ஆய்வு செய்த ஐக்கிய நாடுகளின் போர் குற்ற மற்றும் சித்திரவதைகள் தடுப்பிற்கான சிறப்பு பிரதினிதி பிலிப் அல்ஸ்டன் அந்த வீடியோ உண்மை என கூறி அறிக்கை விட்டார்.
திங்கட்கிழமை, ஜனவரி 11, 2010
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் வீச்சை பிரித்தானியாவில் பதிவு செய்யும் வரலாற்று வாக்குக் கணிப்பில்  அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய இளையோர் அமைப்பு, தமிழீழ செயற்பாட்டாளர்கள் அனைவரும் வேண்டியுள்ளனர்.
திங்கட்கிழமை, ஜனவரி 11, 2010
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10-01-2010 மாலை 2:30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 10, 2010
போர் முடிந்தாலும் அங்கு பாரபட்சங்களும் ஏற்ற தாள்விகளும் கொண்ட நிலமை காணப்படுகின்றது. போருக்கு காரணமான பிரச்சினை தீரவில்லை ஆகவே தான் நாம் ஜி.எஸ்.பி மீழப்பெற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தெரிவித்தோம் என்றார் பிரிட்டிஸ்  வெளி நாட்டு உதவிகளுக்கான துணை அமைச்சர் கரத் தொமஸ்.
புதன்கிழமை, அக்டோபர் 14, 2009

இலண்டன் முத்துமாரி அம்மன் கோவில் தமக்கு எதிராக பிரித்தானிய அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கில் வெற்றி அடைந்துள்ளது.இலண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் கோவில் மற்றும் சிவயோகம் நம்பிக்கை நிதியமும் அதன் தலைவரான திரு சீவரட்னம் அவர்களும் விடுதலைப்புலிகளுக்கும் அதன் ஆதரவு அமைப்புக்களுக்கும் நிதி உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரித்தானிய அறக்கட்டளையினரால் அந்த அமிப்பிற்கும்  அறப்பணிகளில் ஈடுபட மட்டுப்படுத்தப்பட்டதுடன். அதன் தலைவரான திரு சீவரட்னம் அவர்களை சிவயோகம் நிறுவனத்தில் இருந்தும் கடந்த ஆண்டு நீக்கியது.

வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009
தமிழ் வாணி வன்னியில் போர்க்காலகட்டத்தில் இறுதிவரை இருந்து பின்னர் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது பிரித்தானியாவிற்கு தனது சொந்த இடத்திற்கு திரும்பியுள்ளார். இவர் பல்வேறு ஊடகங்களுக்கு கொடுத்துள்ள தகவல்களின் சுருக்கம் வருமாறு.
வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009
இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் அவர்கள் சனல்4  விவகாரம் தொடர்பாக பிரிட்டனின் ஊடக முறைப்பாட்டு சபையிடம் சென்று முறையிட உள்ளார். ஜெனிவா இற்கு பயணம் மேற்கொண்ட மொஹான் பீரிஸ் நாளை பிரித்தானியா வருகின்றார். சனல்4 வெளியிட்ட தமிழ்மக்கள் படுகொலை தொடர்பான ஒளி நாடா வானது பொய்யென சிங்கள அரசு  கூறிவருகின்றது தெரிந்ததே.
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25, 2009

இராணுவ வதைமுகாம்களின் இரும்புப் பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்து மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தும் வரை பாரிய முனைப்புடன் தொடர் போராட்டமாக “வதைமுகாம்களை திறந்துவிடு” என்ற ”திறப்பு” போராட்டத்தை பிரித்தானிய தமிழர் பேரவையானது ஆரம்பித்துள்ளது.

திங்கட்கிழமை, ஆகஸ்ட் 24, 2009

 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சில வகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அரசாங்கம் கோரிய போதிலும், பிரித்தானியா கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த செய்தி தொடர்பாக பிரித்தானிய தமிழ் மக்கள் கருத்து தெரிவிக்கையில் இதில் எந்தளவு உண்மைத்தன்மை உள்ளது என்பதில் ஆதாரம் இல்லை

வெள்ளிக்கிழமை, யூலை 24, 2009

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மருமகனான சித்தார்த் சட்டர்ஜி அண்மையில் ஈராக்கிலுள்ள ஐ.நா. தூதரகத்திலிருந்தும் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டதாக மிக உயர்மட்ட வட்டாரங்கள் இன்னர் சிற்றி பிரஸுக்குத் தெரிவித்ததாக அந்தச் செய்தி நிறுவனம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.

புதன்கிழமை, யூலை 22, 2009
மோதல் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வீரத்துடன் செயலாற்றி, மோதலின் கடைசிக் கட்டத்தில் மனிதப் பேரழிவு ஆபத்து குறித்து உலகத்தை எச்சரித்த தமிழர்களான 5 மருத்துவர்களையும் சிறிலங்கா அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று 'நியூயோர்க் ரைம்ஸ்' ஏடு வலியுறுத்தி உள்ளது.
ஞாயிற்றுகிழமை, யூலை 19, 2009
17 பணியாளர்கள் கொலை தொடர்பாக இலங்கை அரச அதிபரின் விசாரனை குழுவின் அறிக்கையினை சந்தேகம் கொண்ட பட்டிணிக்கு எதிரான அமைப்பு  அது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று 17.00.2009 அன்று விட்டுள்ள செய்தி குரிப்பு ஒன்றில் கூறியுள்ளது. படுகொலைக்கு காரணமானவர்களைக் கண்டறிவதற்கு சிறீலங்கா அரசு வேண்டு மென்றே பின்னடிப்பதாக அந்தத் தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டி உள்ளது.
ஞாயிற்றுகிழமை, யூலை 19, 2009

சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவிற்கு கடனுதவி வழங்குவதை அமெரிக்க திறைசேரி அமைச்சர் முழுமையாகத் தடுக்கவேண்டுமென விரைவில் நிறைவேற்றப்படவிருக்கும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இத்தகவல்கள் பல இணயதளங்களில் கசிந்துள்ளன.சிறிலங்கா அரசானது அனைத்து மனிதாபிமான மற்றும் மனித உரிமை  தேவைகளை பூர்த்தி செய்துள்ளது என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் உத்தரவாதம் அளிக்கும் வரை நிதியுதவிகள் செல்வதனை தடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.