நக்கீரன்

Stories from நக்கீரன்

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010
வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜன நாயக  மக்கள் முன்னணியான மனோ கணேசனின் கட்சியும் போட்டியிட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தினை ஐக்கிய தேசிய கட்சியும், மனோகணேசனும் நிராகரித்துள்ளனர்.
வியாழக்கிழமை, ஜனவரி 14, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் இன்று இந்தியா புறப்பட்டனர். இந்தியா அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இவர்கள் டெல்லி செல்வதாக  கூட்டமைப்பு தெரிவித்தது.
திங்கட்கிழமை, ஜனவரி 11, 2010
நேற்று யாழ் வந்துள்ள இலங்கை அதிபர் மஹிந்த இராசபக்‌ஷ அங்கு தேர்தல் உரையாற்றினார். அதில் பல விடயங்களை எல்லாமே புதிதாகவும், தன்னால் மட்டுமே செய்ய முடிந்தது என்றும் கூறினார்.
புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
கடந்த ஞாயிற்று கிழமை சரத்பொன்சேகா சண்டே லீடருக்கு அளித்த செவ்வியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களை கொல்லும்படி கோத்தபாயதான் 58 வது டிவிசன் தளபதிக்கு கட்டளையிட்டார் என கூறினார்.
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 13, 2009
கடந்த புதன் கிழமை பாகிஸ்தான் - வங்க தேச கடல் எல்லையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கப்பல் ஒன்று நடமாடியதனை கண்ட  இந்திய கரையோர காவல் படையினர் அந்த கப்பலை பிடிப்பதற்கு உசார்படுத்தப்பட்டனர். அந்த கப்பல் தலைமறைவாகும் முயற்சியில் ஈடுபட்டது. சரியான அடையாளங்களை தெரிவிக்க மறுத்ததால் அந்த கப்பல் பிடிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 8, 2009
சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை.
புதன்கிழமை, நவம்பர் 18, 2009
தடுப்பு முகாம்களில்  தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு "இரசிது" வழங்க வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும். போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு முகாம் சுற்று பயணத்தினை முடித்து கொண்ட  த.தே. நாடாளுமன்ற குழு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
வியாழக்கிழமை, யூலை 16, 2009

முப்படைகளின் தலைமை அதிகாரிப் பதவிக்கு சட்ட தகுதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் சரத் பொன்சேகா அதனைப் பொறுப்பேற்றுக்கொள்வாரா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருந்தது. இந்நிலையில்தான் முப்படைத் தலைமை அதிகாரிப் பதவியை சரத் பொன்சேகா ஏற்றுக்கொள்ள மறுத்தால் அந்தப் பதவியை வசந்த கரணகொடவுக்குத் தருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

வியாழக்கிழமை, யூலை 16, 2009
சிறிலங்காவின் கடற்படை அதற்கு எனத் தனியான வானூர்திப் பிரிவு  ஒன்றை எதிர்காலத்தில் அமைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க, ஏவுகணை வசதிகளையுடைய கப்பல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சிறிலங்கா கடற்படை திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
சனிக்கிழமை , யூலை 11, 2009

சகல சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களையும் அவற்றின் நடவடிக்கைகளைக் குறைக்குமாறு அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.