அம்பாரை நிருபர்

Stories from அம்பாரை நிருபர்

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
அம்பாறை மாவட்டத்தில்; தமிழ் மக்களை அதிகளவில் கொண்ட பிரதேசங்களில் கருணாவின் விசுவாசியும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி ஐ.ம.சு கட்சி என்ற பெயரில் அலுவலங்களை திறந்து அதன்மூலம் மக்களுக்கு தொடர்ந்தும்அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதக அம்பாறை மாவட்ட செய்திகள் கூறுகின்றன.
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2010
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் பொன்சேகாவுடன் தாம் எவ்வித உடன்படிக்கைகளையும் செய்துகொள்ளவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 17, 2010
முன்பு பிள்ளையான் குழுவில் செயலாளர் பதவி வகித்தவரும் பின் நாளில் கருணாவுடன் சேர்ந்து சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட்டவருமான நிஷாந்தன் என்பவரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 17, 2010
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு  தெரிவிப்பதன் மூலம்  நாம் கிழக்கு மாகாண சபையினை ஆள முடியும். இவ்வாறு கூறியுள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.
சனிக்கிழமை , டிசம்பர் 26, 2009
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து ஓடியதற்கு காரணமாக இருந்த சயீத் அலிஷாகிர் மெளலானா கடந்த வாரம் வெளி நாடு ஒன்றில் அஞ்ஞாதவாசம் செய்து  விட்டு இலங்கை வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009
காணியினை அபகரிக்கும் நோக்கிலும்,தமிழ் பாடசாலையினை அகற்றும் நோக்கிலும்  ,அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரால் கட்டம் கட்டமாக உடைக்கப்பட்டு வருகின்றன. இதனை பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை, செப்டம்பர் 28, 2009
கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்ப்பாட்டில் 13வது மாகாண இலக்கிய பெருவிழா 'எழுவானில் இலக்கிய காவியம் "என்ற தொனிப்பொருளில் அம்பாறை டி.எஸ்.சேனாநாக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த வெள்ளி ,சனி ஆகிய நாட்களில் நடை பெற்றது.