எம்மைப் பற்றி

எல்லோருக்கும் இதயம் கனிந்த வணக்கம்,

ஈழநாதம் எனும் நாளேடு கடந்த18 ஆண்டுகளாக தாயகத்தில் மக்களின் இதய நாதமாக வெளிவந்து கொண்டிருந்தது. பல்வேறு நெருக்கடிகள்,பின்னடைவுகள்,ஆகியவற்றிக்கு மத்தியிலும் தனது பணியினை மக்களிற்கு வழங்கி வந்தது. அதன்பின் போர்ச்சூழல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து , மட்டுவில், மிருசுவில்,கிளி நொச்சி , மாங்குளம்,புதுகுடியிருப்பு என இடம்பெயர்ந்து சென்று 1999 வரை மக்களிற்கு தனது சேவையினை வழங்கி வந்த ஈழ நாதம் 2000 ம் ஆண்டளவில் மீண்டும் கிளி நொச்சியில் புது பொலிவுடன் தனது பணியினை ஆற்றிக்கொண்டு வந்ததுடன் தென் தமிழீழத்திலும் மட்டு நகரில் தனது நாளாந்த பதிப்பினை வெளியீடு செய்து கொண்டிருந்தது.

 2008 ம் ஆண்டு இறுதிப்பகுதியில்  போர் உச்சக்கட்டத்தினை அடைந்த போது மீண்டும் இடம்பெயர்ந்து  வட்டக்கச்சி,தர்மபுரம்,வள்ளிபுலம்,புதுகுடியிருப்பு,இரணைப்பாலை, என நகர்ந்து இறுதியாக மே 14  2009 ம் ஆண்டு தனது பணியினை முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்காலிகமாக இடை நிறுத்தியது.

போர்க்காலங்களிலும் சமாதானம் என்று சொல்லப்பட்ட காலங்களிலும் குறைந்த வளத்துடன் தன்னாலான மகத்தான பங்களிப்பினை ஆற்றிவந்தது. தற்போது மீண்டும் ஈழ நாததின் பொறுப்பு வாய்ந்தவர்களின் வேண்டுதலிற்கு அமைய  அதன்  துணை ஆசிரியர்களாக கடமை ஆற்றியவர்கள்,ஒரு சில மூத்த பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் அவர்களின் முயற்சியினால்  முதற் கட்டமாக இணைய வழியே தனது சேவையினை ஆரம்பிக்கின்றது.

இந்த முயற்சியும் சேவையும் தொடர்ந்திட அனைத்து தமிழ் உள்ளங்களிடமிருந்தும் ஆக்க பூர்வமான கருத்துக்களையும், ஆக்கங்களையும்,ஆதரவுகளையும் எதிர்பார்க்கின்றோம்.

அகிலம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள்,ஆர்வலர்கள்,படைப்பாளிகள் அனைவரிடமும் ஈழ நாதம் ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கின்றது. இந் நேரத்தில் ஈழநாதம் ஆனது பல்வேறு காலகட்டங்களிலும் இடங்கள் மாறினாலும் தடங்கள் மாறாது தன் கொள்கையில் உறுதியாக இருந்து சேவையினை வழங்குவதற்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள், நாட்டு பற்றாளர்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள்  ஆகியோர்களை நினைவு கூருகின்றோம்.

நன்றி,வணக்கம்.

தாயக நினைவுடன்,
ஆசிரியர் குழு,
ஈழ நாதம்.
01.08.2009

தொடர்புகளிற்கு

editor@eelanatham.net    (ஆக்கங்கள்,செய்திகள் மற்றும் தகவல்களிற்காக)
advert@eelanatham.net   (விளம்பரங்கள், நிகழ்சிகள், அறிவிப்புகள் ஆகியவற்றுக்காக)