வெளிநாடு

சனிக்கிழமை , அக்டோபர் 31, 2009

ஜி.எஸ்.பி வரி சலுகையினை நிறுத்த போவதாக நாம் கூறி தமக்கு அரசியல் தண்டனை வழங்க இருப்பதாக இலங்கை பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் அது தவறானது. மாறாக இலங்கை தான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை 2005 ம் ஆண்டு எமக்கு வாக்குறுதி அளித்தபடி எதனையும் செய்யவில்லை என  இலங்கை மற்றும் மாலைதிவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேனாட் ஷா குறிப்பிட்டுள்ளார். 

சனிக்கிழமை , அக்டோபர் 17, 2009

இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வியாழக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்ட தமது உண்ணா நோன்பினை கைவிட்டுள்ளனர். இந்த போராட்டம் ஒர் எதிர்மறையான கருத்தை ஏற்படுத்துவதாகவும் அத்துடன் அங்கு இருக்கின்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நிலையினை கருத்தில் கொண்டும் தாம் இந்த போராட்டத்தினை கைவிடுவதாகவும் கூறியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 2009
இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிப்பு செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 பொது மக்களும் இன்று தமக்கு நீதி வழங்குமாறு உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் படகில் இருந்து இறங்க மறுத்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 2009
கனேடிய கொன்சர்வேட்டிவ் கட்சியினை சேர்ந்த இரு பாராளுமன்ற உற்ப்பினர்களுக்கு இலங்கைக்கு சென்று அங்கிருக்கின்ற தமிழ் மக்களின் தடுப்பு முகாம்களை பார்வையிடுவதற்கு விசாவிற்கு விண்ணப்பித்தபோது அதனை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.பற்றிக் பிரவுண்,போல் கலெண்ட்ரா ஆகிய இரு உறுப்பினர்களுக்கே விசா மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இது தொடர்பாக கனேடிய அரசுக்கு முறையிடவுள்ளதாக தெரியவருகின்றது.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2009

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இவ் வாண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளார். சர்வதேச இராஜதந்திரம் மற்றும் மக்கள் மத்தியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அவரது அதி தீவிர முயற்சிகளுக்காக ஒபாமாவுக்குநோபல் சமாதானப் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் பரிசுக்குழு அறிவித்திருக்கின்றது.

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2009
பிரித்தானியாவில் குடுயுரிமை அல்லது வேலை அனுமதி பத்திரம் இன்றி வேலை பார்த்ததற்காக 10 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானியாவில் பைசெஸ்ரர் உணவு தயாரிப்பு நிலயம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது  பிரித்தானிய குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் அந்த துறையினை சேர்ந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 
வியாழக்கிழமை, அக்டோபர் 8, 2009
பசுபிக் நாடுகளான சுமார் 25 நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. அங்கு கடற்பகுதியில் கடந்த இரு வாரங்களாக ஏற்படும் நில அதிர்வுகளால் அண்மையில் இந்தோனேசியா, பாலி, சுமாத்திரா, நியூசிலாந்து, யப்பான் ஆகிய நாடுகளில் பெரும் சேதம் ஏற்பட்டது 2000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை, அக்டோபர் 7, 2009
இந்தோனேசியா இராணுவ தளபதி ஜெனெரல் டியோகு சாண்டோஸ் அவர்கள் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் மேஜர் கெனெரல் நந்தா மல்லவராட்சி அவர்களை சந்தித்து இலங்கை இந்தோனேசியா படைத்துறை ஒத்துழைப்புக்கள் பற்றி ஆராய்ந்து  வருகின்றார்.
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6, 2009
இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது.னேற்று முன் தினம் மெனிக் பாம் தடுப்பு  முகாமுக்கு பிரிட்டனின் டிஃபிட் அமைச்சர்  மைக் ஃபொஸ்டர் அவர்கள் சென்று பார்வையிட்டு  திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6, 2009
அமெரிக்க அரசு தி|ணைக்களம் அண்மையில் பாலியல் குற்றம் தொடர்பாக சிறிலங்கா பற்றி இரண்டு அறிக்கைகளுக் மூன்று வியாக்கியானங்களும்  விட்டுள்ளன இவை ஒன்றுடன் ஒன்று முரண்படு காணப்படுகின்றன. இந்த அறிக்கைகள் ஹிலாரி கிளிங்ரன் மற்றும்  மெலானி வெரேர் ஆகியோரினால் விடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009
மேற்கு சுமத்திரா மாகாணத்தின் தலைநகரான படாங் நகரில் 9 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு நேற்றுமுன்தினம் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. இதன் காரணமாகப் பல கட்டடங்கள் முற்றாகத் தரைமட்டமாகியுள்ளதுடன் தொலைத் தொடர்பு வசதிகளும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2009

 

இலங்கை, பால்கன் நாடுகளில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் நடவடிக்கையானது ஓர் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக  அமெரிக்க வெளிவிகார செயலர் ஹிலாரி ரொதாம் கிளிங்டன் தெரிவித்துள்ளார். நேற்று ஐ. நா சபையின் 64 வது அமர்வில் பேசிய இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை, செப்டம்பர் 24, 2009

"இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் அனைவரும் எதிர்வரும் ஜனவரிமாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பிரதிநிதிக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தவறினால் ஜனாதிபதி மஹிந்த மீதான நம்பிக்கை கெட்டுப்போய்விடும். எனவே இனியாவது வாக்குறுதிகளை ஜனாதிபதியும் அவரது அரசும் நிறைவேற்றவேண்டும்''

வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009
அவுஸ்ரேலியாவிற்கு ஆட்களை கடத்தியதற்காக இலங்கை நபர் ஒருவருக்கும், இந்தோனேசிய நபர்கள் இருவருக்கும் அவுஸ்ரேலிய பேர்த் நீதிமன்றம் ஒன்று 20 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. அல்லது 220,000 டொலர்கள் அபராதம் விதித்துள்ளது. இந்த மூவரும் 80 வெளினாட்டவர்களை இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு படகுமூலம் கடத்தியதாக கூறப்படுகின்றது.
வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009
இலங்கையில் ஒரு பிரபல விடுதி ஒன்றில் இருந்து இலங்கையினை சேர்ந்த நபர்கள் வெளினாட்டவரின் கடனட்டைகளின் பல பில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பிரிட்டனின் முன்னணி நகைச்சுவை நடிகரின் கடனட்டையும் அடங்கும். இது தொடர்பாக இலங்கை காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 1, 2009

பர்மாவில் போரிட்ட ஒரு சீக்கிய சிப்பாய் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானதாக கருதப்படும் தினத்தின் 70 ஆண்டுகளை குறிக்கும் வகையில், போலந்தில் வைபவங்கள் நடக்கின்றன. உலகமெங்கும் பரந்துபட்டு நடந்த அந்தப் போர் உலகிலேயே மனித குலம் இதுவரை சந்தித்த மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகியது. அது ஒரு முழுப் போர்- ஒட்டுமொத்தமாக, முன்னெப்போதும் இல்லாதபடி , அனைத்து உலகத்தையும் அது ஆக்கிரமித்தது.

புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2009

 

ஐ.நா அமைப்பின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ள பான் கீ மூன் தனது, அதிகாரத்தை தக்க தருணத்தில் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனவும், சிறந்த தலைமைத்துவத்திற்கு உரிய பண்புகளும் அவரிடம் இல்லை எனவும், ஐ.னா வுக்கான நோர்வே தூதுவர் மொனா ஜூல்  அந்த நாட்டு அமைச்சிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் இஸ்ரேல் பாலஸ்தீன உடன்படிக்கையில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2009
சிறி லங்கா மாலைதீவு நாடுகளிற்கிடையில் புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்று கைசாத்தாகி உள்ளது. அனுராத புரத்தில் இடம்பெற்ற; மாலைதீவு தலைவர் நசீட் முகமத் மற்றும் மகிந்த ராஜபக்ஸ,  போகொல்லாம ஆகியோர்களிற்கிடையிலேயான சந்திப்பு ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை, ஆகஸ்ட் 13, 2009

வியெற்னாம் அரசும்  ஸ்ரீலங்கா அரசும் தமது உறவுகளை பலப்படுத்தும் பொருட்டு பல்வேறு ஒப்பந்தங்களையும்,உடன்பாடுகளையும் செய்து கொண்டுள்ளன. கடந்த 10, 11 ம் திகதிகள் ஸ்ரீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர்,  வியற்னாம் அரசின் பிரதி அமைச்சர் டாவோ வியெட் றுங் அவர்களும் கலந்து கொண்டு

திங்கட்கிழமை, ஆகஸ்ட் 10, 2009
  பிரித்தானிய அரசின் சர்வதேச உறவுகளிற்கான  நாடாளுமன்ற குழுவின் 2008 ற்கான அறிக்கை  வெளிவந்துள்ளது. இதில் இலங்கையில் கடந்தகால போர் நடவடிக்கையில் இடம்பெற்றதாக கூறப்படும்  யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை  வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Syndicate content