புதன்கிழமை, நவம்பர் 18, 2009
தடுப்பு முகாம்களில் தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு "இரசிது" வழங்க வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும். போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு முகாம் சுற்று பயணத்தினை முடித்து கொண்ட த.தே. நாடாளுமன்ற குழு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.