இலங்கையில் மனித உரிமைகள் மீறல், போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை செயலருக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பான்கி மூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர்.
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதார தடை, போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுடன் தமிழர்களிற்கான தன்னாட்சி அதிகாரத்தினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் உலக தமிழர் பேரவையினால் முன்னெடுப்பு.
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரலாம் என பாகிஸ்தானுக்கான இலங்கை தூதரும் முன் நாள் விமானப்படை தளபதியுமான ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களங்கிய குற்ற சாட்டு பத்திரம் அடுத்த வாரம் இராணுவ தளபதியிடம் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதவான்கள் வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜே விஸ்வநாதன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இலங்கை தமிழர்களை இந்தியா கைவிட்டு விட்டது. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தி வருகின்றனர். இவ்வாறு அமுதன் என்ற போரினால் பாதிகப்பட்ட யாழ் வாசி திரு அமுதன் தெரிவித்துள்ளார்.